புதுச்சேரி: வடக்கு சப் கலெக்டர் அலுவலகச் செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் உழவர்கரை பகுதிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பை தொடர ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் வழங்க வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 13ம் தேதி காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், முதலியார்பேட்டை, புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டி.என். பாளையம், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர்கள், அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர்கள் காலாப்பட்டு எம்.ஓ.எச்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் 14ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, முதலியார்பேட்டை, ஒலந்தை, தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அரியாங்குப்பம், மணவெளியைச் சேர்ந்தவர்கள், அரியாங்குப்பம் தூய இதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தட்டாஞ்சாவடி, உழவர்கரை, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் 15ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புதுச்சேரி காசுக்கடை, ராஜ்பவன், கதீட்ரல் பகுதியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியிலும், முதலியார்பேட்டை புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் சிறப்பு முகாம்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் 16ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்தவர் உப்பளம் துாய இருதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், முருங்கப்பாக்கம், கொம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் தீரர் சத்தியமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பூரணாங்குப்பம், தவளகுப்பத்தை சேர்ந்தவர்கள் தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சாரத்தை சேர்ந்தவர்கள் லாஸ்பேட், மடுவுப்பேட், இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் 17ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் அதே பகுதியில் உள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும், 18ம் தேதி ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் சிறப்பு முகாம்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.