உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கருவூட்டல் சிறப்பு முகாம் 550 கால்நடைகள் பயன்

கருவூட்டல் சிறப்பு முகாம் 550 கால்நடைகள் பயன்

பாகூர் : புதுச்சேரி கால்நடை பராமறிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் மணப்பட்டு கிராமத்தில் கறவை மாடுகளுக்கு கருவூட்டல் முகாம் நடந்தது.பாகூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார், பாண்லே கால்நடை மருத்துவர் வடிவேலன் ஆகியோர் செயற்கை முறை கருவூட்டல் நன்மைகள், கன்று பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை, சினைப்பருவம், பேறுகால மேலாண்மை குறித்து விளக்கினர். கறவை மாடுகளுக்கு சினை பிடிப்பதற்கான ஹார்மோன் மற்றும் சத்து ஊசிகள் போடப்பட்டு, தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது.கடந்த 19ம் தேதி 28ம் தேதி வரை 10 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் குருவிநத்தம், பாகூர், சின்ன ஆராய்ச்சிக்குப்பம், சேலியமேடு, கிருமாம்பாக்கம், கடுவனுார், கரையாம்புத்துார், மணப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 550 கால்நடைகள் பயன்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி