உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் சிறப்பு மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரியில் சிறப்பு மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி : புதுச்சேரியில் புற்றுநோய் குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்கில், ஏராளமானோர் பங்கேற்றனர்.புதுச்சேரி இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஒன்கோ கில் கேன்சர் சென்டர், அருவி பிளாஸ்டிக் சர்ஜரி கிளினிக் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம், செண்பகா ஓட்டலில் நடந்தது. இதில் கேன்சர் குறித்து டாக்டர்கள், விரிவாக எடுத்துரைத்தனர்.புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர் ரவிசங்கர், மார்பக புற்றுநோய்களுக்கு மார்பகத்தை அகற்றாமல், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதையும், அதிலும் சில ஆண்டுகளாக, மார்பக புற்று நோய்களுக்கான சிகிச்சை முறைகள் பல மாற்றங்களை உண்டாக்கி உள்ளதையும் விளக்கினார்.தொடர்ந்து இன்றைய நடைமுறைகளில், புற்றுநோயின் மருந்துகளையும், அதை சார்ந்த கதிர் வீச்சுகள் குறித்து, டாக்டர் பாண்டியன் பாஸ்கர் ராவ் விளக்கினார். தவிர, சதை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அருண்குமார் மற்றும் விஜயராகவன், சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் பிரச்னைகளையும், அதற்கு தேவையான அறுவை சிகிச்சைகள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்து விளக்கினார்.பல ஆண்டுகளுக்கு முன், காலில் சர்க்கரை நோய் பிரச்னை ஏற்பட்டால், காலை நீக்க வேண்டும் என்ற பிரச்னை இருந்ததையும், ஆனால் கால்களையும், விரல்களையும் காப்பாற்றும் அளவிற்கு மருத்துவ முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும், விளக்கினார்.இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை