உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 

புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தில், 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை மத்திய வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக, மாறி உள்ளது. இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாகவும் வலுப்பெற்று, வங்கதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சென்னை, கடலுார், புதுச்சேரி உட்பட, 9 கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி துறைமுகத்தில், 1ம், எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மேலும் கட்டுமரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை