உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் அல்லாத படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியிடாததால் மாணவர்கள் தவிப்பு

நீட் அல்லாத படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியிடாததால் மாணவர்கள் தவிப்பு

புதுச்சேரி : நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள சூழ்நிலையில் இதுவரை கல்வி கட்டணம் வெளியிடாததால் மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை அமைப்பாக சென்டாக் முதற்கட்டமாக நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற்று, வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டது.இதில், ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன. 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்தனர். தற்போது அனைத்து ஆட்சேபனைகளும் பரிசீலனை செய்து, இறுதி தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை இப்படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியிடப்படவில்லை. இது மாணவர்களையும், பெற்றோர்களையும் தவிப்பிற்குள்ளாகியுள்ளது.பெற்றோர்கள் கூறுகையில், 'கல்வி கட்டணம் தெரிந்தால் அதற்கேற்ப தொகையை தயார் செய்து, கட்ட முடியும். இறுதி தரவரிசை பட்டியல் வெளியாகியும் இதுவரை கல்வி கட்டணத்தை சென்டாக் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றது.கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய காலதாமதமாகும்பட்சத்தில் குறைந்தபட்சம் கடந்தாண்டு கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி மாணவர்களை சேர சொல்லலாம். அதன் கூடுதல் கட்டணத்தை கால அவகாசம் கொடுத்தும் கட்ட சொல்லலாம்.ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் சென்டாக் மவுனமாக உள்ளது. கல்வி கட்டணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் முதற்கட்ட கவுன்சிலிங் வேலைகளை துவக்கி உள்ளது. இந்த விஷயத்தில் கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர் தலையிட்டு கல்வி கட்டணம் வெளியிட செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை