உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலுவைத்தொகை வழங்கல் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

நிலுவைத்தொகை வழங்கல் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விருத்தாசலம், :ஐகோர்ட் உத்தரவின்படி, ஆரூரான் சர்க்கரை ஆலை சார்பில் 43 சதவீத நிலுவைத் தொகை வழங்கும் பணி துவங்கியதால், கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்துாரில் இயங்கி வரும் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் 2013 - 2018ம் ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல், ஆலை திவாலானதாக கடன் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.அதில், கரும்பு விவசாயிகளுக்கு 57.36 சதவீதம் நிலுவைத் தொகையை வழங்க கடந்த 2021ம் ஆண்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.அதில், 100 சதவீத நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர ஐகோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக கடலுார் கலெக்டர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் திவாலான ஆலையை நடத்தி வரும், கால்ஸ் டிஸ்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 43 சதவீத நிலுவைத் தொகையை தர ஒப்புக்கொண்டு, மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தது.இதுதொடர்பான பேச்சுவார்த்தையில், கரும்பு விவசாயிகள் 7,200 பேருக்கும் 43 சதவீத நிலுவைத் தொகை ரூ.5 கோடியை ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும்.கரும்பு விவசாயிகள் பணத்தை பெற்றுக் கொண் டோம் என 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதற்கட்டமாக ஏழு விவசாயிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து, 43 சதவீத கரும்பு நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மீதமுள்ள விவசாயிகள் தங்களது சான்றிதழ்களை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை