உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜவகர் பால்பவனில் கோடை கால பயிற்சி; மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ஜவகர் பால்பவனில் கோடை கால பயிற்சி; மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுச்சேரி : ஜவகர் பால்பவன் கோடை கால பயிற்சி வகுப்புகளில், மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற ஜவகர் பால் பவன் சார்பில் ஆண்டு தோறும் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும். இந்தாண்டு கோடை கால பயிற்சிகள் கடந்த 2ம் தேதி துவங்கியது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள தலைமை ஜவகர் பால் பவன், லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் கோடை வகுப்பு நடக்கிறது. இங்கு, 6 வயது முதல் 16 வயதுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஓவியம், இசை, நடனம், கித்தார், டிரம்ஸ், கீபோர்டு, தையல், வயலின், வீணை, மிருதங்கம், தேக்வாண்டோ உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி தலைமை ஜவகர் பால்பவனில் மட்டும் 600 மாணவர்களுக்கும், 4 இடங்களிலும், காரைக்காலில் 1 இடத்திலும் சேர்த்து மொத்தம் 1600 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகினற்னர். நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம் ஓவியம், கைவினை, கேரம், செஸ், இறகு பந்து, தேக்வாண்டோ உள்ளிட்ட பயிற்சிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். தினசரி காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும் இப்பயிற்சி இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி