உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் தஞ்சம்

தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் தஞ்சம்

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை தமிழக போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவத்தில் முக்கிய நபராக செயல்பட்ட திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதற்கு முன், திருச்சி புத்துார் ரவுடி துரைசாமி, 43; என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.இந்த என்கவுண்டர் சம்பவங்கள், தமிழக ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போலீசாரால் தேடப்படும் பல ரவுடிகள் புதுச்சேரிக்குள் தஞ்சம் புகுந்தனர். லாட்ஜ்களில் ரவுடிகள் தங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு சென்றதும், அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள கூட்டாளிகளின் வீடுகள், பண்ணை, முந்திரி காடுகள், விவசாய பண்ணை நிலங்களில் உள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். அங்கு மூன்று வேளையும் சரக்குடன் விருந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ