உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

புதுச்சேரி: காரைக்கால் பகுதியில், தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் பாட்சா தலைமை தாங்கினார். மாநிலத் துணை தலைவர் விநாயக மூர்த்தி, மாநில பொது செயலாளர் தீபக் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கத்திற்கு 'ஆசிரியர் மணியோசை' எனும் மாதந்திர இதழ் தொடங்கவும், வரும், 2025., ஜனவரியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவது என, தீர்மானிக்கப் பட்டது.புதுச்சேரியில், போக்குவரத்து நெரிசல் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.அதை கருத்தில் கொண்டு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மாவட்டங்களின் போக்குவரத்து சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளி வேலை நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் அனுஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுகன்யா, இந்துமதி, அசோக்குமார், காரைக்கால் மாவட்டத் தலைவர் வேலாயுதம், புதுச்சேரி மாவட்டத் தலைவர் விஜயா, மாவட்ட பொது செயலாளர் இந்துமதி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி