உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெய்வேலி, ரயில்வே ஸ்டேஷன் அருகே அண்ணா நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று அதிகாலை 6:30 மணியளவில் வாலிபர் ஓருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.இறந்தவர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 30, என்பதும், இயற்கை உபாதைக்காக ரயில் பாதையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற ரயில் மோதி இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை