உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவன் மாயம் தந்தை புகார்

சிறுவன் மாயம் தந்தை புகார்

அரியாங்குப்பம்: விளையாட சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் வருண், 13; இவர் அரியாங்குப்பம் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் வருண் வீட்டில் இருந்த தனது தங்கையிடம் விளையாடுவதற்கு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை