மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
6 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
6 hour(s) ago
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் தொகுதியில், நேற்று நடந்த பிரசாரத்தில், தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், 'இண்டியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்த உடன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவார்.காங்., தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், 100 நாள் வேலையில் ரூ. 400 கூலி உயர்த்தி, 150 நாட்கள் ஆண்டுக்கு வேலை தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மதத்தின் பெயரால் ஆட்சி செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பா.ஜ., அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இனத்திற்கு விரோதியான,பா.ஜ., அரசை அகற்றப்பட வேண்டும். மத்தியில் நல்லாட்சி அமைய வைத்திலிங்கத்திற்கு 'கை' சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நாரா கலைநாதன், வி.சி.க., முதன்மைச் செயலாளர் பொழிலன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மாயக்கிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago