உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி பாரஸ்ட் பள்ளி மாநில அளவில் சாதனை 

தி பாரஸ்ட் பள்ளி மாநில அளவில் சாதனை 

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் தி பாரஸ்ட் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.புதுச்சேரியில் புதிய தலைமுறை சார்பில், 'வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடந்த அறிவி யல் கண்காட்சியில் தி பாரஸ்ட் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட புதிய அறிவியல் படைப்புகள் மற்றும் திட்ட மாதிரிகளின் செயல்முறை விளக்கத்தை வழங்கினர். இதில் தி பாரஸ்ட் பள்ளியின் 7 ம் வகுப்பு மாணவர்களான சுபாஷினி தர்மலிங்கம், பிரியங்கா செல்வம் ஆகியோர் திட்ட மாதிரியான 'ஈக்கோ பிரெண்ட்லி வீடு' செயல்படுத்தி வீட்டிற்கு ஒரு விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, அவற்றை எவ்வாறு கையாளுவது குறித்து திட்ட மாதிரி மூலம் விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர்.பரிசு பெற்ற மாணவர்களையும், ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் சந்தோஷ்சிவன் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை