உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சன்டே மார்க்கெட்டில் குவிந்த பொது மக்கள்

சன்டே மார்க்கெட்டில் குவிந்த பொது மக்கள்

புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நேற்று சன்டே மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.புதுச்சேரி நகரப்பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சன்டே மார்க்கெட் கூடுகிறது.இங்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி நகரின் மிக முக்கிய வீதியான காந்தி வீதி, நேரு வீதி யின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் மட்டும் வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் சன்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கடைபிடிக்கின்றனர்.தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியில் இருந்து குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கான தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் சன்டே மார்கெட் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்