உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பெறுவோருக்கு கவர்னர் ஆறுதல்

மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பெறுவோருக்கு கவர்னர் ஆறுதல்

புதுச்சேரி : புதுச்சேரியில் மதில்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பெறும் தொழிலாளர்களை கவர்னர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.புதுச்சேரி தேங்காய்த்திட்டு வசந்தம் நகர், 3வது குறுக்கு தெருவில் கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியின் போது மதில் சுவர் வாய்க்கால் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.காயமடைந்த தொழிலாளர்கள் குணசேகரன், சீனிவாசன், பாலமுருகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று மாலை அரசு மருத்துவமனை வந்த கவர்னர் ராதாகிருஷ்ணன், சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.பின்பு கவர்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:ஒரு மிகப்பெரிய துக்கமான சம்பவம் நடந்தது, 5 சகோதரர்களை இழந்துள்ளோம். இது போன்ற விபத்து எதிர்காலத்தில் நடக்காமல் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்படும். விபத்தில் காயமடைந்த சிகிச்சை பெற்று வரும் தொழிலாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க 'டீன்'னிடம் தெரிவித்துள் ளோம். மேலும் உயிரிழந்தவர்களுக்கு குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரம் என்பதால் தேர்தல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நிவாரணம் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்தில் உயிரிழப்புகள் நடக்காமல் இருக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை