உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹைமாஸ் கம்பம் உடைந்து விழுந்தது

ஹைமாஸ் கம்பம் உடைந்து விழுந்தது

பாகூர் : மணப்பட்டு கிராமத்தில் ைஹமாஸ் விளக்கு கம்பம் உடைந்து விழுந்தது. கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் நுாலகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த ஹைமாஸ் கம்பம் பராமரிப்பின்றி பழுதானது. இதனிடையே, கம்பத்தின் கீழ் பகுதி துரு பிடித்து நாளுக்கு நாள் வலுவிழந்தது. விபத்து ஏற்படும் சூழல் இருந்து வந்ததால், அதனை அப்புறப்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஹைமாஸ் கம்பம் அடிப்பகுதி உடைந்து அருகில் உள்ள சவுண்ட் சர்விஸ் கொட்டகையின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால், அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை