உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

ஆசிரியரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்த மாணவரை ஆசிரியர் தாக்கியதில், அவரது செவித்திறன் பாதிக்கப்பட்டது.இதில், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மாணவரை தாக்கிய ஆசிரியரை கைது செய்யக்கோரி திருநள்ளாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த எஸ்.பி., பாலச்சந்தர் மற்றும் போலீசார், மாணவரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ