உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயிலில் சோதனை நடத்திய போலீசாருக்கு வந்த வேதனை

ரயிலில் சோதனை நடத்திய போலீசாருக்கு வந்த வேதனை

வில்லியனுார்: வில்லியனுார் வந்த ரயிலில் மோப்ப நாய்யுடன் சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டதால் பரபரப்பு நிலவியது. வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் புதுச்சேரிக்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக வில்லியனுார் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை வில்லியனுார் ரயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, கிரைம் போலீசார் மற்றும் மோப்ப நாய் உள்ளிட்ட குழுவினர் சோதனைக்கு தயார் நிலையில் இருந்தனர்.மாலை 6:15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில், வில்லியனுார் ரயில் நிலையத்தில் நின்றது. 5 நிமிடம் நிற்கும் எனக் கூறப்பட்டது. ரயிலில் தனித்தனி குழுவாக அனைத்து பெட்டிகளிலும் பயணிகளிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வில்லியனுார் ஸ்டேஷனில் இருந்து மூன்று நிமிடத்திலேயே ரயில் புறப்பட்டது. இதனால் ஓடும் ரயிலில் இருந்து போலீசார் இறங்க முடியாமல் தவித்தனர். இது குறித்து புதுச்சேரி ரயில் நிலைய பொறுப்பாளரிடம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் நிலை பொறுப்பு அதிகாரி, ரயில் லோகோ பைலட்டிடம் போலீசாரின் சோதனைக்காக சிறிது நேரம் ஸ்டேஷனில் நின்றால் என்ன என, கேட்டு கடிந்து கொண்டார். இதனிடையே ரயில் புதுச்சேரி வந்தது. வில்லியனுாரில் இருந்து போலீஸ் ஜிப்பை புதுச்சேரிக்கு வரவழைத்து இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீண்டும் வில்லியனுார் சென்றனர்.ரயிலில் சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை