உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., பிரமுகர் கட்டிய வீடு அகற்றம் வில்லியனுார் அருகே பரபரப்பு

பா.ஜ., பிரமுகர் கட்டிய வீடு அகற்றம் வில்லியனுார் அருகே பரபரப்பு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய இடத்தில் பா.ஜ., பிரமுகர் கட்டிய வீடு இடித்து அகற்றப்பட்டது.வில்லியனுார், சேதராப்பட்டு அடுத்த கரசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு, 54; ஊசுடு தொகுதி பா.ஜ., கேந்திர பொறுப்பாளர். கடந்த 2006ல் கரசூர் வருவாய் கிராமத்தில் 749 ஏக்கர் நிலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு கையகப்படுத்தியது.பின், பிப்டிக் நிறுவனத்திடம் அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கரசூர் மெயின் ரோட்டில் உள்ள செல்வராசுக்கு சொந்தமான நிலத்தை அரசுக்கு வழங்க மறுத்தார். அவருக்கு சேர வேண்டிய நிலத்தின் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.தனக்கு வீடு கட்டி குடியேற வேறு இடமில்லாததால் கடந்தாண்டு அவரது நிலத்தில் வீடு கட்டும் பணியை துவக்கினார். அப்போது வில்லியனுார் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு கட்ட கூடாது என, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதையடுத்து, சில மாதங்களுக்கு முன், புதிதாக கட்டிவரும் வீட்டை இடிக்க அரசு அதிகாரிகள் சென்றனர். அவர்களிடம் செல்வராசு மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திரும்பிச் சென்றனர்.அதன்பிறகு செல்வராசு,அமைச்சர் சாய்சரவணன்குமார் உதவியுடன் கடந்த மாதம் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாரு தலைமையில் தாசில்தார் சேகர், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பிப்டிக் மேலாளர் ராகிணி, எஸ்.பி., வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரங்களுடன் நேற்று காலை 9:30 மணிக்கு அங்கு சென்றனர்.செல்வராசு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. செல்வராசு மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். பின், ஜே.சி.பி., மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை