உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலவரையற்ற போராட்டம் தொடரும்; பேராசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

காலவரையற்ற போராட்டம் தொடரும்; பேராசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடந்தது.தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கு அதற்கான சம்பள உயர்வு பலன்களை வழங்க வேண்டும், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசு மான்யத்தில் சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இளஞ்சேரலாதன் கூறும்போது, 'எங்களது கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. எங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை