உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்றதால் பரபரப்பு

டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்றதால் பரபரப்பு

புதுச்சேரி : டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்று, சாலையின் நடுவில் நின்றதால் பரபரப்பு நிலவியது.கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்கு டெம்போ நேற்று மதியம் 12:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது.முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகே சென்ற டெம்போவின் முன்பக்க சக்கரம் திடீரென உடைந்து கழன்றதால் நிலை தடுமாறி சிறிது துாரம் சென்று நின்றது. டெம்போவில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பினர். இதில், பயணம் செய்தவர்கள் அந்த வழியாக சென்ற டவுன் பஸ்சில் ஏறி சென்றனர்.சாலை நடுவழியில், நின்ற டெம்போவை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் டெம்போ டிரைவர் ஓரமாக நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி