மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
19 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
19 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
19 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
19 hour(s) ago
பாகூர்: பாகூர் ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துத்துடன் துவங்கியது.தினமும் காலை 8:00 மணிக்கு பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு, யானை, மயில், ரிஷபம், நந்தி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா கடந்த 20ம் தேதி நடந்தது.நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் இரவு நடந்தது. பாகூர் விநாயகர் கோவில் குளத்தில் நடந்த தெப்ப உற்சவத்தில் மூலநாதர் வேதாம்பிகையம்மன் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்கதர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கோபாலக்கிருஷ்ணன், செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago