மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
5 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
5 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோறற்சவத்தை முன்னிட்டு தங்க சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில், பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை 10:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:30 மணிக்கு தங்க சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி காலை 7:30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
5 hour(s) ago
5 hour(s) ago