உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்குறள் முற்றோதல் பயிலரங்கம்

திருக்குறள் முற்றோதல் பயிலரங்கம்

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கம், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து திருக்குறள் முற்றோதல் பயிலரங்ககை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தின.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் திருக்குறள் முற்றோதலை நடத்தி திருக்குறளின் மேண்மை மற்றும் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொண்டு, தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், திருக்குறள் முற்றோதல் பயிலரங்கம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, புதுவை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடக்கிறது.நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கி, திருக்குறள் முற்றோதல் இயக்கம் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கி, பயிற்சியைத் துவக்கி வைத்தார்.திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்றுநர் சங்கீதா கண்ணன் முற்றோதல் பயிற்சியை மாணவர்களுக்கு நடத்தினார்.தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ராஜா, சிவேந்திரன், ஆனந்த ராசா உட்பட பலர் பங்கேற்றனர்.பொருளாளர் அருள் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை