| ADDED : ஆக 02, 2024 01:13 AM
காரைக்கால்: காரைக்காலில் நாவல் பழம் வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய பெண் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் பெரியபேட் பகுதியை சேர்ந்த திஸ்மாஸ் மகன் பாப்சிம்சன் இவர் நேற்று முன்தினம் திருநள்ளாறு சாலையில் தள்ளு வண்டியில் நாவல்பழம் விலை கேட்டுள்ளார். விற்பனை செய்யும் கவிதா, 41; கால் கிலோ ரூ.100 எனத் தெரிவித்துள்ளார்.மற்ற இடத்தில் குறைந்தவிலைக்கு விற்பதாக கூறியதால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பாப்சிம்சனை, கவிதா ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் கவிதா மகன் வினோத்குமார் 33, நண்பர் விக்னேஷ் 20 ;ஆகிய மூவரும் பாப்சிம்சனை தாக்கியுள்ளார்.இதை தடுக்க வந்த அவரது மனைவி மற்றும் மகனை தாக்கினர். இதில் காயம் அடைந்தவர்கள் அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து கவிதா, அவரதுமகன் வினோத்குமார், விக்னேஷ் ஆகியமூன்று பேரையும் கைது செய்தனர்.