உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூரில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம்

பாகூரில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம்

பாகூர் : பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில், 'இயற்கை விவசாயம் மற்றும் பங்கேற்பு உத்திரவாதத்துடன் கூடிய சான்றளிப்பு' என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் நடந்தது. பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், நடந்த முகாமில், வேளாண் அலுவலர் பரமநாதன் வரவேற்றார்.இணை வேளாண் இயக்குநர் சிவபெருமான் தலைமை தாங்கினார். துணை வேளாண் இயக்குநர் குமாரவேலு முன்னிலை வகித்தார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் வல்லுனர் பிரபு 'இயற்கை விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பிலும், இக்கோவா பயிற்சி நிறுவன நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் 'பாரம்பரிய விவசாய வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்பு உத்திரவாதத்துடன் கூடிய சான்றளிப்பு' என்ற தலைப்பிலும், விவசாயிகள் சுப்ரமணியன், ராமலிங்கம் ஆகியோர் 'இயற்கை விவசாய பொருட்களில் மதிப்பு கூட்டல் மற்றும் விற்பனை வாய்ப்புகள்' என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தனர்.முகாமில், விவசாயிகள் தங்கள் விவசாய வயல்களை பாரம்பரிய இயற்கை விவசாய திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டனர்.வேளாண் அலுவலர் வளர்மதி நன்றி கூறினார். பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை