மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
19 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
19 hour(s) ago
மின்சார வாகனங்களுக்கு சாலை வரி செலுத்துவதில் 50 சதவீத சலுகை வழங்கப்படும். பொது மற்றும் தனியார் இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நீண்ட துார வழித்தடங்களில் 10 மிதவை பஸ் இயக்கப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் 9 மீட்டர் 25 மின்சார பஸ்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஏ.சி. பஸ்கள் நகர மற்றும் துணை நகர பகுதியில் இயக்கப்படும். பிரதமரின் மின்சார பஸ் திட்டத்தின் மூலம் 75 மின்சார பஸ்கள் மத்திய அரசு மானியத்துடன் இயக்கப்படும்.பழைய வாகனங்களை அழித்து புதிய வாகனங்கள் வாங்குவோரை ஊக்குவிக்கும் பொருட்டு, பழைய வாகன அழிப்பு கொள்கை உருவாக்கப்பட்டு வணிக வாகன உரிமையாளர்களுக்கு 15 சதவீதம் (8 ஆண்டுகளுக்கு), தனி நபர் வாகனங்களுக்கு 25 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரி நகர பகுதியில் 15 ஸ்மார்ட் பஸ் நிறுத்தங்கள் நிறுவப்பட உள்ளது. 38 இ-ரிக் ஷா சுய உதவி குழு பெண்கள் மூலம் இயக்கப்பட உள்ளது. பி.ஆர்.டி.சி., யில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் தானியங்கி கட்டண வசூல் வசதி மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு நிறுவ மத்திய அரசு உதவி பெறப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் விரைவில் விடப்பட உள்ளது. நடப்பு ஆண்டிற்கு ரூ. 47.50 கோடி இத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago