உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த இருவர் கைது

கத்தியுடன் திரிந்த இருவர் கைது

புதுச்சேரி : சின்னையன்பேட் பகுதியில் கத்தியுடன் திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரவுடிகள் வீடுகளில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மோப்ப நாய் பைரவா துணையுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, லதா ஸ்டீல் ஹவுஸ் பின்புறம் சின்னையன்பேட் பகுதியில் இருவர் கத்தியுடன் சுற்றி வருவதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இருவரும் தப்பியோட முயற்சித்தனர்.அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது, லாஸ்பேட்டை வாசன் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த யோபு (எ) யோகேஸ்வரன், 24; சாரம் பிள்ளைத்தோட்டம், கெங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலாயுதம், 21; என தெரிந்தது. இருவரிடம் இருந்த 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ