| ADDED : ஜூலை 15, 2024 11:38 PM
புதுச்சேரி: நெல்லிதோப்பு தொகுதி பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதி, அண்ணா நகர் விரிவு, பெரியார் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் சாலைகள் கந்தளாகவுள்ளது. மெயின் ரோட்டிற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையில் ஆமைவேகத்தில் பாதாள சாக்கடை பணி நடந்து வரும் பகுதிகளில் உள்ள மக்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் நேற்று குறைகளை கேட்டறிந்தார். அண்ணா நகர் விரிவாக்கம் பாரதி வீதியில் பல்வேறு நகரின் கழிவு நீர் குழாய்களை இணைத்து பெரிய குழாய்களை வழியாக கழிவு நீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்த பணியை பார்வையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் கூறும்போது, நெல்லித்தோப்பு தொகுதியில் ஆமைவேகத்தில் பாதாளசாக்கடை பணிகள் நடந்து வருகின்றது. லோக்சபா தேர்தலுக்கு முன், பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து பணிகளை விரைவுப்படுத்த நான் கோரிக்கை விடுத்தேன். தற்போது மழை காலம் நெருங்கி உள்ளதால் பாதாள சாக்கடை பணிகளை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.