மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள 3,413 முதுநிலை, டிப்ளமோ இடங்களுக்கு 31,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 66 வகையான முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளுக்கு கியூட் நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.பல்கலைக் கழகத்தின் இந்தாண்டிற்கான முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு கடந்த மாதம் 26ம் தேதி வரை ஆன்லைனில் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை முடிந்த சூழ்நிலையில் மொத்தமுள்ள 66 முதுநிலை, டிப்ளமோ படிப்பு களுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் ரேங்க் அடிப்படையில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு வெளியிட்டார்.எம்.டெக்., இ.சி.இ., படிப்பிற்கு - 18 பேர், எம்.டெக்., நனோ சயின்ஸ் டெக் னாலஜி - 26, எம்.டெக்., பசுமை ஆற்றல் தொழில்நுட்பம் - 17 பேர், எம்.ஏ., பொருளதார படிப்பிற்கு 1,110 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.ஏ., தமிழ் படிக்க 41 பேரும், எம்.ஏ., ஆங்கிலம் பயில 1,305 பேரும், புதுச்சேரி பல்கலையில் எம்.பி.ஏ., வணிக நிர்வாகம் பயில 2474 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடும் போட்டி
பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 66 முதுநிலை, டிப்ளமோ படிப்புகளில் 3,413 இடங்கள் மட்டுமே உள்ளன. இந்த இடங்களில் சேர மொத்தம் 31,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இடங்கள் கிடைத்த மாணவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என, பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago