மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
5 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், பஞ்சாங்க படனம் மற்றும் வேதபாராயணம் இன்று முதல் துவங்குகிறது.புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி கடந்த 5 ஆண்டுகளாக சத சண்டி ஹோமம், கிருத்திகா மண்டல வேதபாராயணம், மார்கழி பஜன், ராதா கல்யாணம், சீதா ராம கல்யாணம், ஆன்மிக சுற்றுலா, லலிதா சகஸ்ரநாம பாராயணம் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.அதனைத் தொடர்ந்து, வேதபுரீஸ்வரர் கோவிலில், தினமும் மாலையில் விற்பன்னர்களை கொண்டு வேதபாராயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேதபாராயணம் நடக்கும் இடங்களுக்கு சென்று அதனை காதால் உள்வாங்குவது மிகப்பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வேத பாராயணம் சில ஆண்டுகளாக தடைப்பட்டது. அதனால் சமிதி சார்பில், வேதபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் அனுமதியுடன், விஷ்ணு கணபாடிகள் தலைமையில் வேதபாராயணத்தை தினமும் மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.முதல் நாளான இன்று 14ம் தேதி மாலை 6:30 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் தொடங்குகிறது. ஆண்டு தோறும் சமிதி சார்பில், தமிழ் வருட பிறப்பு நாளில் பஞ்சாங்க படனம் நடத்தப்படும்.அதன்படி, இந்தாண்டு ராஜிவ்காந்தி மருத்துவமனை எதிரில் உள்ள சாராதாம்பாள் கோவிலில் மாலை 4:00 மணிக்கு பஞ்சாங்க படனம் விஷ்ணு கணபாடிகள் தலைமையில் நடக்கிறது. வரும் மே 26ம் தேதி, சமிதி சார்பில், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளியில் மருத்துவ முகாமிகற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago