உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கண்காட்சி வாகனத்திற்கு வரவேற்பு

புதுச்சேரியில் கண்காட்சி வாகனத்திற்கு வரவேற்பு

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வந்த ஐ.சி.ஏ.ஐ., எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட் அப் யாத்ரா கண்காட்சி வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.மத்திய அரசு, இந்திய பட்டய கணக்கர்களின் சங்கத்துடன் இணைந்து நாடு முழுதும் உள்ள கிளைகளில், ஐ.சி.ஏ.ஐ., எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட் அப் யாத்ரா, துவங்கி நடத்தி வருகிறது.இதில், கண்காட்சி வாகனம், 100 நாட்களில் 100 நகரங்கள் பயணிப்பது என்று திட்டமிடப்பட்டு, அதன் படி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கண்காட்சி வாகனம், நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தது.இந்த வாகனத்தை, புதுச்சேரி பட்டைய கணக்கர்கள் சேர்மன் ரஞ்சித் குமார், செயலாளர் மோகன்ராஜ், புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., சங்கத் தலைவர் அருள்செல்வம், சிட்பி வங்கி மேலாளர் பாஸ்கர், ஸ்டேட் வங்கி மேலாளர் சதீஷ் பாபு மற்றும் பட்டய கணக்கர்கள் சங்க நிர்வாகிகள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பட்டய கணக்கர்கள், தொழில் முனைவர்கள், புதிதாக தொழில் துவங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை