உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதற்றமான ஓட்டுசாவடிகள் எவை? போலீசாருடன் கலெக்டர் ஆலோசனை

பதற்றமான ஓட்டுசாவடிகள் எவை? போலீசாருடன் கலெக்டர் ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் பதற்றமான ஓட்டுசாவடிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான போலீஸ்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோதாரு, உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நார சைதன்யா, எஸ்.பி.,க்கள் லட்சுமி சுஜன்யா, ரகுநாயகம், பாஸ்கர், பழனிவேல், மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர். ஓரிரு தினங்களில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்