உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டு ஆண்டுக்கு முன் எம்.பி., ஆனவருக்கு அமைச்சர் பதவி பெற்று தராதது ஏன்?: காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் கேள்வி

இரண்டு ஆண்டுக்கு முன் எம்.பி., ஆனவருக்கு அமைச்சர் பதவி பெற்று தராதது ஏன்?: காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் கேள்வி

புதுச்சேரி : நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மத்தியில் இருந்து பணம் வரும் என ஏமாற்றுகின்றனர் என வைத்திலிங்கம் பேசினார். புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில், காங்., சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் நாராயணசாமியுடன் லாஸ்பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்து பேசியதாவது; புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்பு கிடைக்காமல், தனியார் கம்பெனிகளில் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் கஷ்டப்படுகின்றனர். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், 2 மாதத்தில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் அறிவித்துள்ளார்.அதில், 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்படும். அதன் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். குழந்தைகள் படிப்பு, முதியோர் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தலாம். எப்பொழுதும் மகளிர் பற்றி சிந்திக்க கூடியவர் ராகுல். புதுச்சேரியில் 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் என ரங்கசாமி கூறுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி. ஆன சீனியர் செல்வகணபதிக்கு ஏன் அமைச்சர் பதவி பெற்று தரவில்லை. நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்தியில் இருந்து பணம் வரும் என ஏமாற்றுகின்றனர். ஆனால் பணம் ஏதும் வராது. புதுச்சேரி மின்சார துறையை விற்க உள்ளனர். அதில் வரும் பணத்தை வீணாக்க திட்டமிட்டுள்ளனர். மத்தியில் நிச்சயம் காங்., ஆட்சி அமையும். புதுச்சேரிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை