உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

புதுச்சேரி: குடிப்பழக்கம் மனைவி கண்டித்ததால், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார், வி.மணவெளி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை, 40; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனை மனைவி வசந்தி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த துரை நேற்று முன்தினம் அவரது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ