உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன் விற்கும் பெண்கள் ஏனாமில் திடீர் போராட்டம்

மீன் விற்கும் பெண்கள் ஏனாமில் திடீர் போராட்டம்

புதுச்சேரி : ஏனாமில், மீன் விற்கும் பெண்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.ஏனாமில், இந்திராகாந்தி நகராட்சி மீன் மார்கெட் உள்ளது. மீன் மார்க்கெட் கட்டடங்கள் சேதமடைந்தது. அதனை மண்டல நிர்வாக அலுவலகம் மூலம் சீரமைக்கப்பட்டு, மீன் விற்கும் இடத்தில் உள்ள தரை முழுதும் மார்பல் கற்களால் பதிக்கப்பட்டது.மார்பல் தரை வழுவழுப்பாக உள்ளதால், மீன் விற்கும் பெண்கள் வழுக்கி விழுந்து படுகாயமடைகின்றனர். வழுவழுப்பாக உள்ள மார்பல் தரையை மாற்றி சாதாரண தரையாக அமைத்து தர வேண்டும் என, மீன் விற்கும் பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.மண்டல அலுவலகம் எதிரில், மீன்களை வைத்து மீன் விற்கும் பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த ஏனாம் நகராட்சி ஆணையர் கந்தவல்லி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாதாரண தரையாக மாற்றி தருவதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை