உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

திருக்கனுார்: குமாரப்பாளையம் சங்க ராபரணி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான வி.நெற் குணம் பழைய காலணியைச் சேர்ந்தவர் மலையன், 75; கூலி தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி பகுதி யான குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்றார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த காட்டேரிக் குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மலையன் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி