மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
1 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
1 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
1 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
1 hour(s) ago
புதுச்சேரி: கோரிமேடு பகுதியில், ஓமியோபதி மருத்துவத்தின் வரலாறு குறித்து விவரிக்கும் வகையில் நடந்த கருத்தரங்கில், ஏராளமானோர் பங்கேற்றனர்.புதுச்சேரி அரசு நலவழித்துறை, ஆயுஷ் இயக்குனரகம் சார்பில் உலக ஓமியோபதி தின கருத்தரங்கம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற செவிலியர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். செவிலிய அதிகாரிகள் நிர்மலா, மருந்தாளுநர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார்.சுகாதார நிலைய ஓமியோ டாக்டர் அருணாச்சலம் ஓமியோபதியின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து பொது மக்களிடையே உரையாற்றினார். சுகாதார உதவியாளர் சிவக்குமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சுகாதார உதவியாளர் ஜெகநாதன், ஆயுஷ் உதவியாளர்கள் கங்கா, சீதா ஆகியோர் செய்திருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago