உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுப்பணித்துறை பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொதுப்பணித்துறை பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 99 இளநிலை பொறியாளர் (சிவில்) மற்றும் 69 மேற்பார்வையாளர்கள் (குரூப் 'பி') பணியிடங்களுக்கு இன்று (7 ம் தேதி) காலை 10:00 மணி முதல் ஆன்லைன் மூலம் https://recruitment.py.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் வகுப்பு வாரியாகவும் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினீயரிங் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்லுா ரிகளில் படித்து முடித்திருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வுகள் (முதல் தாள், 2ம் தாள்) ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். முதல் தாளில் ஆங்கிலம், பொதுஅறிவு, பொது அறிவியல் ஆகிய பிரிவுகளில் 80 மதிப்பெண்களுக்கும், கம்ப்யூட்டர் 20 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். 2ம் தாளில் சிவில் படிப்புகள் தொடர்பாக கேள்விகள் இடம்பெறும். தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை