மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த வாலிபர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.கிருமாம்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் மகன் ஹரிசுதன், 19; ஐ.டி.ஐ. படித்து வந்தார். இவர், குருவிநத்தம் பெரியார் நகரில் உள்ள தனது அக்கா மீரா வீட் டில் வசித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்கள் 9 பேருடன், புதுக்குப்பம் - மணப்பட்டு பல்மைரா கடற்கரைக்கு சென்றுள்ளார்.அனைவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி ஹரிசுதன் மாயமானார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் மீனவர்கள், மற்றும் கடலோரா காவல் படையினரின் மூலமாக ஹரிசுதனை தேடினர். பனித்திட்டு கடற்கரை பகுதியில் ஹரிசுதன் மயங்கி நிலையில் கிடந்தவரை, சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார், மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago