உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறையில் 146 கைதிகள் உடல் உறுப்பு தானம்

சிறையில் 146 கைதிகள் உடல் உறுப்பு தானம்

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் ஐ.ஜி., கண்காணிப்பாளர் மற்றும் 146 கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர்.புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பல்வேறு திட்டங்கள் சிறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கைதிகள் மூலம் தோட்டம் அமைப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, எப்.எம்., உடற்பயிற்சி கூடம், யோகா, நடனம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சிறையில் உள்ள கைதிகள் இறக்கும்போது தங்களின் உடல் உறுப்புகளை தானம் வழங்க முன் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை மேற்கொண்டது.ஜிப்மர் மருத்துவ குழுவினர் சிறை கைதிகளை பரிசோதித்து 57 தண்டனை கைதிகளும், 89 விசாரணை கைதிகள், சிறை ஐ.ஜி., ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் ஒரு உதவி சப்இன்ஸ்பெக்டர், பெண் வார்டர் ஆகிய 150 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதாக ஒப்புதல் அளித்து, அதற்கான படிவங்களை சமர்ப்பித்தனர்.உடல் உறுப்பு தானம் வழங்கி கைதிகளுக்கு, தானம் வழங்குவதற்கான அடையாள அட்டை ஜிப்மர் மூலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், அரவிந்தர் சொசைட்டி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை