உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 15 ஊர்க்காவல் படையினருக்கு சட்டசபை காவலர் பணி

15 ஊர்க்காவல் படையினருக்கு சட்டசபை காவலர் பணி

புதுச்சேரி : ஊர்க்காவல் படை வீரர்கள் 15 பேர் பணி மூப்பு அடிப்படையில் சட்டசபை காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.சட்டசபை காவலர் பணியிடம் 15 காலியாக இருந்தது. இந்த இடங்களை, போலீஸ் துறையில் பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினர்களை பணி மூப்பு அடிப்படையில் நிரப்ப ஒப்புதல் பெறப்பட்டது. அதனையொட்டி, பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஊர்க்கவல் படை வீரர்கள் 15 பேருக்கு, நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பணியாணையை வழங்கினார். அப்போது, சபாநாயகர் செல்வம் உடனடிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ