உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலைக்கழகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது 

பல்கலைக்கழகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது 

புதுச்சேரி: காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, மத்திய பல்கலைக்கழகம் நுழைவு வாயில் அருகே 2 நபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ் பெக்டர் குமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்ட இருவரும் பைக்கில் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில், பொம் மையார் பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் மதன் (எ) ஜாக்ஸ் ஸ்பேரோ, 28; செழியன் மகன் தேவா (எ) திவாகர், 27; என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 105 கிராம் கொண்ட 21 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவர்கள் மீது சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப் பதிந்து, கஞ்சா பொட்டலங்கள், பைக், 2 மொபைல் போன், ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை