மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபர் கைது
24-Apr-2025
புதுச்சேரி : இருவேறு இடங்களில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.அண்ணா சாலை பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர்.அவர், கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த முகேஷ், 22, என்பது தெரியவந்தது. இவர் மீது, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. கத்தியை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.அதே போல, லாஸ்பேட்டை இடையாஞ்சாவடி பகுதியில் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார் அந்த நபரை பிடித்து, விசாரித்தனர். அவர், லாஸ்பேட்டை இடையாஞ்சாவடி பகுதியை சேர்ந்த சஞ்சய், 24, என்பது தெரிய வந்தது. கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
24-Apr-2025