உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேட்டுப்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர், 45; பெருமாள், 72; கொம்பாக்கத்தைச் சேர்ந்த சபரிநாதன், 26; ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட 3 இலக்க லாட்டரி சீட்டு, ரூ. 27 ஆயிரத்து 300 ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி