மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
25 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
25 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
36 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
37 minutes ago
புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையத்தில், தனியார் சாராய ஆலையை கொண்டு வர ஆறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வரிடம் மனு கொடுத்தனர்.முதல்வர் ரங்கசாமியை லிங்காரெட்டிப்பாளையம், காட்டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி, ரங்கநாதபுரம், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து அளித்த மனு;லிங்காரரெட்டிப்பாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு தனியார் சாராய ஆலையின் கழிவு நீர் ஆற்றில் கலந்து மாசு ஏற்பட்டது. கால்நடைகள், மீன்கள் இறந்தன. நிலத்தடி நீர் மட்டமும் படுபாதாளத்திற்கு சென்று, விவசாயமும் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து தொடர்ந்து ஆலைய அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டபோது கூட, எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் மீண்டும் சாராய ஆலையை கொண்டு வரும் முயற்சி நடப்பது கண்டு அதிர்ச்சியாக உள்ளது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்த கூடிய சாராய ஆலை தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க அரசு அனுமதிக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
25 minutes ago
25 minutes ago
36 minutes ago
37 minutes ago