உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு

கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு

அரியாங்குப்பம்: குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன், 47; இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவசாந்த பார்வதி, 42; கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்த வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டில் வைத்திருந்து கத்தியால் கணவன் கழுத்தில் குத்தினார். இதில் காயமடைந்த அவர், தனது நண்பரை மொபைல் போன் மூலம் அழைத்து , தவளக்குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்