உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிவேகமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்து

அதிவேகமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்து

புதுச்சேரி : இ.சி.ஆரில் அதிவேகமாக சென்ற கார் நிலை தடுமாறி சிவாஜி சிலை அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக நால்வர் உயிர் தப்பினர்.புதுச்சேரி, கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின், 20; பொறியியல் கல்லுாரி மாணவர். இவர் தனது நண்பர்கள் மூவருடன், தனது PY.01.BV.3026 எண்ணுடைய இனோவா காரில் நேற்று காலை 11:00 மணிக்கு, இ.சி.ஆரில் கொக்குபார்க்கில் இருந்து கோட்டக்குப்பம் நோக்கி சென்றார்.அதிவேகமாக சென்ற கார் சிவ விஷ்ணு மகால் வளைவு அருகே சென்றபோது ஒருவர் சாலையை கடந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் அடித்தபோது, கார் நிலை தடுமாறி சென்டர் மீடியன் மீது மோதி, சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில், அஸ்வினுக்கு மட்டும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. காரில் இருந்த ஏர் பேக் ஓப்பன் ஆகியதால், மற்றவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. கவிழ்ந்து கிடந்த கார் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. வடக்கு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை