உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தகப் பையில் பாம்பு

புத்தகப் பையில் பாம்பு

புதுச்சேரி : பள்ளி மாணவரின் புத்தகப்பையில் பதுங்கிய பாம்பினை வனத் துறை ஊழியர்கள் பிடித்தனர்.புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையை எடுக்க முயன்றபோது,அதில் பாம்பு நெளிவதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.அதை தொடர்ந்து, மாணவர்களும்,ஆசிரியர்களும் வகுப்பறையில் சிதறி ஓடினர்.தகவல் அறிந்து வந்த வனத் துறை ஊழியர்கள் கண்ணதாசன்,வேலாயுதம் ஆகியோர் மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை பிடித்தனர்.வனத்துறை ஊழியர்கள் கூறும்போது,பிடிப்பட்ட விஷம் இல்லாத சாரை பாம்பு.வளர்ந்த பெரிய சாரைப்பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் நச்சுத்தன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும்போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை