உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வருக்கு நன்றி தெரிவித்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வாகன பேரணி

முதல்வருக்கு நன்றி தெரிவித்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வாகன பேரணி

புதுச்சேரி: வணிகர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து வாகன பேரணி நடந்தது.புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு கொடியையை அறிமுகப்படுத்தி வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வாகன பேரணி நடந்தது.முன்னதாக எம்.ஜி.ஆர் நகரில் அமைக்கப்பட்ட புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து வணிகர்கள் கூட்டமைப்பினர் 1000 இருசக்கர வாகனங்களில் பேரணியில் பங்கேற்றனர்.மூலக்குளத்தில் துவங்கிய பேரணி புதுச்சேரி நகர பகுதிகளில் ஊர்வலமாக சென்றது.பின் முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, வழுதாவூர்சாலை, குருமாம்பேட்,பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், வில்லியனுார் வழியாக 25 சட்டசபை தொகுதிகளுக்கும் பேரணி சென்றது.பேரணியில் ஒலி பெருக்கி மூலம் முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மாலை 6 மணிக்கு ரெட்டியார்பாளையத்தில் பேரணி நிறைவு பெற்றது. பேரணியின் போது 5 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.இந்த பேரணியை புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு செயலாளர் முருகப்பாண்டியன், பொருளாளர் தங்கமணி, சிறப்பு துணை தலைவர் சீனிவாசன்,ஒருங்கிணைப்பாளர் சித்திக் ரகமான், வில்லியனுார் பாபு ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை